டெங்கு மரணங்கள் 79 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79 மரணங்கள் பதிவாகியுள்ளன.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, தற்போதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 103,565 ஆகும்.

அத்துடன், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.19 சதவீதமானோர், 54,046 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் மட்டுமே பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட மட்டத்திலான புள்ளிவிபரங்களின்படி, அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 21,828 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *