மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் மகனும், நடிகருமான 37 வயதான கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
துணை கதாபாத்திரங்கள் மூலம் கார்த்திக் சபேஷ் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். குறிப்பாக சித்தார்த்தின் ‘உதயம் NH4’, ‘காதல் சொல்ல வந்தேன்’ ஆகிய படங்கள் கார்த்திக் சபேஷுக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது.
‘குளிர் 100’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘காதல் சொல்ல வந்தேன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகனுக்கு நண்பராக நடித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக கார்த்திக் சபேஷின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திய குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மேலும், சென்னை வளசரவாக்கத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

