முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கெஹலிய ரம்புக்வெல்ல இன்று(20) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதவான் இந்த வழக்கின், மற்றுமொரு சந்தேக நபராக கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவின் பெயரை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

 

கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக கடந்த 07ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *