அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜே.டி.வான்ஸின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜே.டி.வான்ஸ் அறிவித்துள்ளார்.

மிச்சிகனில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆதரவு தனக்கு இருந்தாலும், 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

எனக்கு 4 சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடன் நேரத்தை செலவிட விருப்பம் கொண்டுள்ளேன். மேலும் என் மனைவி உஷாவுக்கு அரசியல் களத்தில் பெரிய அளவில் விருப்பம் இல்லை.

பெரிய முடிவுகளை எடுப்பதில் தான் எப்போதும் தாமதம் செய்பவர். இருப்பினும் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த பெரிய முடிவை எடுத்துள்ளேன்.”என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *