ராமஞ்ஞ மகா பீடத்தின் அனுநாயக்கரும், கண்டி கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதியுமான கெப்பிட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரர் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.