சிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா!

இந்தியா-சிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 வது 20 ஓவர் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

இந்தியா சென்றுள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.

இதில் இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்து வருகிறது.

இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ஓட்டங்கள் பெற்றது.

116 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பெரும் போராட்டத்திற்கு மத்தியில் 15.4 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *