மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று முனைத்தீவு பொது நூலகத்தில் சர்வதேச சிறுவர் தின விழா இன்று (03.10.2026)ஆம் திகதி முற்பகல் 10.30 மணியளவில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
அத்துடன் முனைத்தீவு, பெரியபோரதீவு மற்றும் பட்டாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாலர் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முனைத்தீவு கிராம உத்தியோகத்தர், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மேன்பவர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் போது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அவர்களின் திறமைகளைப் பாராட்டிப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
சிறுவர்களின் மகிழ்ச்சியையும் அவர்களின் உரிமைகளையும் மையப்படுத்தி இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

