காரைதீவு மாணவியின் சாதனை – தங்கப் பதக்கம் வென்று அசத்தல்!

 

காரைதீவைச் சேர்ந்த சகாதேவராஜா டிவானுஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் கட்ட MBBS பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றமைக்காக, “செல்லத்தங்கம் தம்பிப்பிள்ளை நினைவு தங்கப் பதக்கம் – 2026” விருதைப் பெற்றுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு இன்று (03) மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் டி. வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. மௌனகுருவிடமிருந்து டிவானுஜா தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

காரைதீவு விபுலானந்த வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா – நேசரஞ்சினி தம்பதியரின் இரண்டாவது புதல்வி டிவானுஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *