பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டு ஆண்கள் கிரிக்கெட் பைனலில் பாகிஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு ஆண்கள் கிரிக்கெட் (‘டி-20’) பைனல் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் சார்பில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 61 ரன்களும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் திலக் வர்மா 51 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தானுக்கு 212 ரன் இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இதன் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஹாசன் நவாஸ் 96 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சயீம் அயூப் 29 ரன்களில் அவுட் ஆனார். இறுதியாக 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தோல்வி அடைந்த பாகிஸ்தான் வெள்ளிப்பதக்கம் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *