234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று மாலை 6 மணி வரை இந்த வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.
இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இதற்காக வாக்களிக்க தமிழகத்தில் 5 கோடியே 73 இலட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.
அவர்கள் வாக்களிப்பதற்காக தமிழக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிகளுக்காக 1 கோடியே 47 இலட்சம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்களிப்பு நிலையங்களாக அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவப்படையினரும், தமிழ்நாடு சிறப்பு பொலிஸ் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இன்றைய தினம் முழுவதும் விசேட அதிரடிப்படை வீரர்கள் 514 வாகனங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
ஏதாவது ஒரு பகுதியில் பிரச்சினைகள் அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நிலைமையை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டள்ளன.

