மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக மரமுந்திரிகைச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் அதிகளவில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
மரமுந்திரிகை பூக்கும் இக்கால பகுதியில் அதிகமான உஷ்ணமான காலநிலை நிலவி வருவதால் பூக்கள் கருகி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் அதிகளவிலான விவசாயிகள் மரமுந்திரிகைச் செய்கையில் ஈடுபட்டுள்ளதுடன் வாகரை, வெல்லாவெளி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்ட வருகின்றது.
அதிகளவில் இலாப மூட்டக்கூடிய தொழிலாகிய மரமுந்திரிகைச் செய்கையில் பெருமளவிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பமான கால நிலையினால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

