இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மொணராகலை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

