க.பொ.த உயர்தரம் 2025 பரீட்சையின் நாடளாவிய முடிவுகள் வெளியிடப்பட்டதுடன், முன்னிலை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் டிலான் கருணாரத்ன கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் முன்னிலை பெற்றுள்ளார். கணிதப் பிரிவில் கிளிநொச்சி மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலிடத்தை பெற்றுள்ளார். வர்த்தகப் பிரிவில் காத்தான்குடி மத்திய கல்லூரியின் எம்.எஸ்.எம். பார்த்தான் முன்னிலையில் உள்ளார். மேலும் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வேயங்கொடை பண்டாரநாயக்க மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஈ. சாணி மனோதா முன்னிலை பெற்றுள்ளதுடன், கலைப் பிரிவில் வயம்ப ரோயல் கல்லூரியின் அசிந்த ரத்நாயக்க முன்னிலை பெற்றுள்ளார்
2026-04-01

