கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இந்தத் தாக்குதலினால் கப்பலின் ஒரு பக்கத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதிலிருந்த ஊழியர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன், கப்பலிலிருந்து கடலில் எண்ணெய் கசிவு ஏற்படுவது போன்ற பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை, இதற்கு ஒரு நாளைக்கு முன்னர் துபாய் கடற்பரப்பிற்கு அருகில் இருந்த மற்றுமொரு பெரிய எண்ணெய் கப்பல் மீது ஈரானின் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதன் மூலம் ஏற்பட்ட தீ பின்னர் அணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *