டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர் பென் டக்ட் இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது நாடான இங்கிலாந்தின் மீது கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அவர் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.
பென் டக்ட் விலகியதைத் தொடர்ந்து, தற்போது டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் உள்ள இலங்கை தொடக்க ஆட்ட வீரர் பெதும் நிசங்க, அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெறுவார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

