மத்தியகிழக்கில் தீவிரமடைந்துள்ள யுத்த நிலையின் காரணமாக உலக பொருளாதாரம் கேள்விக்குறியாகிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலை இப்படியே போகுமாக இருந்தால் மூன்றாம் உலக நாடுகள் என்பது இலங்கை உள்ளிட்ட நாடுகளும் தாக்கத்துக்கு உள்ளாகும் என்பதில் எந்த விதை ஐயமும் இல்லை
. அதை ஒட்டியதாக எமது மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் தற்பொழுது விஷேசமாக மட்டக்களப்பு நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த எரிபொருள் தட்டுப்பாடு வரும் என்கின்ற ஒரு மாயையை ஏற்படுத்தி பொதுமக்கள் எல்லோரும் இந்த எரிபொருளை வழங்குகின்ற அந்த நிலையங்களில் நீண்ட கியூகளில் நின்று அந்த வாகனங்களுக்கான எரிபொருளை நிரப்பவேண்டும் என்பதில் ஆதங்கமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகனங்கள் உள்ளிட்டவைகளில் எரிபொருளை நிரப்புகின்ற நேரத்திலே விஷேசமாக போத்தல்கள் கொள்கலன்கள் உள்ளிட்ட ஏனையவற்றிலும் கூட அவர்கள் இந்த எரிபொருளை வாங்குவதன் காரணமாக எரிபொருளை ஒரு தட்டுப்பாடு ஏற்படும் போது அந்த எரிபொருளை கூடுதலான விலைக்கு விற்கலாம் என்கின்ற அந்த ஒரு எண்ணப்பாட்டின் அடிப்படையிலேயே அத்தகைய முனைப்புக்களில் அவர்கள் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது.
இது சம்மந்தமாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் என்ற வகையிலே, நேற்று எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்ததுக்கு அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு பிரதம பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு, குறிப்பிட்ட இந்த பெற்றோலை வழங்கும், எரிபொருட்களை வழங்கும் இந்த நிலையங்களில் உள்ளவர்களுக்காக அந்த அறிவித்தலை வழங்குமாறு பணித்திருந்தேன்.
அதற்கமைவாக நேற்று ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இத்தகைய அறிவித்தல்கள் பொலிஸ் மூலம் வழங்கப்பட்டிருந்தாலும் கூட நேற்றி பின்னேரம் அளவிலே அத்தகைய செயற்பாடுகள் மீண்டும் நடைபெறுவதாக இந்த பொதுமக்களால் முறைப்பாடு கிடைக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையிலே மீண்டும் நான் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இந்த தகவலை அறிவித்து இன்று அந்த தகவல் முழு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன்.
இது இப்படியாக இருந்த போதிலும் இத்தகைய இந்த செயற்பாட்டினால் உண்மையிலே இலங்கைக்கு பெற்றோல் எரிபொருள் வருவது என்றால் அது மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து வருவதில்லை. ஏனைய இந்திய சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து வருவதாக எமக்கு இலங்கை அரசாங்க தகவல்கள் கிடைக்கும்போதிலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த மாதிரி எல்லோருக்கும் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தி வீதிகளில் போகின்ற பாதசாரிகள் வாகன ஓட்டிகள் எல்லோருக்கும் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் நீண்ட கியூவாக நின்று வரிசையில் நின்று ஏற்படுத்துகின்ற இந்த நிகழ்வானது உண்மையிலே எல்லோருக்கும் ஒரு பெரிய ஒரு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசாங்கம் இந்த நிலையை எப்படி அறிவித்திருந்தாலும் கூட பொதுமக்கள் இந்த நிலைப்பாடுகளில் முன்னிலையில் இருப்பதன் காரணமாக எதிர்காலத்திலே அந்த கியூஆர் என்கின்ற ஒரு திட்டம் கூட அறிமுகப்படுத்தப்பட்டு இந்த எரிபொருளை விரிவுபடுத்துவதற்காகவும் இலகுப்படுத்துவதற்காகவும் ஒரு செயல் திட்டத்தை அரசு முன்னெடுக்கும் என்று அறிவித்திருக்கின்றது.
இது எப்படியாக இருந்த போதிலும் பொதுமக்கள் நிலமையை கருத்தில் கொண்டு எல்லோருக்கும் எல்லா விடையங்களும் கிடைக்க வேண்டும். விஷேசமாக இந்த மாதிரி உதாரணமாக ஐந்து நாட்களில் சேகரித்து பொதுமக்களுக்கு வழமையான முறையிலே வழங்கக்கூடிய எரிபொருட்களை இதே மாதிரி நீண்ட வரிசையில் நின்று கொல்கலன்களில் பெறுவதன் மூலம் ஒரே நாளிலே முழு எரிபொருட்களும் விற்பனை ஆகிவிடுகிறது.
இதனால் சாதாரணமாக அன்றாட கூலித்தொழில் செய்பவர்கள் நாளாந்த வேலைக்கு செல்பவர்கள் ஏனைய திணைக்களங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் எல்லோரும் தாங்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் எரிபொருளை நிரப்புகின்ற அந்த நிலை மாறி அவர்கள் தகுந்த உரிய நேரத்துக்கு தங்களுக்கு கடமைக்கு செல்ல முடியாத ஒரு நிலையையும் ஏற்படுத்தி ஒட்டுமொத்தமாக முழு செயல்பாடையும் ஸ்தம்பிதமடையும் நிலைக்கு இந்த பெற்றோல் தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்துகின்ற ஒரு நிலையை இந்த மக்கள் கொண்டிருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருக்குறது.
இது அப்படியாக இருந்த போதிலும் இத்தைகைய இந்த செயற்பாடுகள் முற்றாக மறுக்கப்பட, ஒழிக்கப்பட வேண்டும். ஏனெனில் வழமையான ஒரு நடவடிக்கையை மக்கள் எல்லாம் செய்யவேண்டுமாக இருந்தால் இத்தகைய ஒரு சட்டத்துக்கு முரணான ஒரு மீறிய ஒரு செயற்பாடுகளை செய்வதை நாங்கள் ஒட்டுமொத்தமாக கண்டிக்கின்றோம் மறுக்கின்றோம் என்பதை மட்டக்களப் மாநகர முதல்வர் என்ற வகையில் இந்த இடத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

