ஏவுகணை தாக்குதலில் இலங்கையரும் பாதிப்பு!

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார  தெரிவித்துள்ளார்.

பீயேர்ஷெபா பகுதிக்கு ஈரான் ஏவிய ஏவுகணையை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும், அதன் சிதறல்கள் குறித்த இலங்கை பெண் பணிபுரிந்த வீட்டின் மீது விழுந்துள்ளதாகவும் திரு. பண்டார குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த இலங்கை பெண் அந்த வீட்டில் பராமரிப்பாளராக   பணிபுரிந்து வந்துள்ளார்.

காயமடைந்ததையடுத்து அவர் சொரோகா   மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருந்ததால், மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு தற்போது வீடு திரும்பியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

அவரது நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என்றும் இலங்கை தூதுவர் நிமால் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *