இன்றைய தங்க நிலவரம்!

தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து நகைபிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.

அந்த வகையில், சர்வதேச சந்தை நிலைவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையிலும் இன்று திங்கட்கிழமை (23) தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய தங்க விலை நிலைவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *