படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் அவர்களின், 20வதுஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது, இன்றைய தினம் (24) மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் இரங்களான கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

