விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 173 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 159 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 126 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 04 பேரும், கஞ்சா செடிகளுடன் 06 பேரும், போதை மாத்திரைகளுடன் 07 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 303 கிராம் 644 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 270 கிராம் 704 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 349 கிராம் 802 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 51 கிராம் 996 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 1491 கஞ்சா செடிகளும், 296 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *