இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் ஸ்டென்ட் அல்லது பைபாஸ்? மருத்துவர்கள் விளக்கம்!

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் படிவதால் அடைப்பு ஏற்படலாம். இதனால் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் மாரடைப்புக்கும் வழிவகுக்கலாம்.

இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா, அதன் தீவிரம் என்ன என்பதைக் கண்டறிய Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அடைப்பின் தன்மையைப் பொறுத்து மருந்துகள் மூலம் சிகிச்சை, Angioplasty மூலம் ஸ்டென்ட் பொருத்துதல் அல்லது Bypass அறுவை சிகிச்சை ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்டென்ட் சிகிச்சையில் அடைப்பு ஏற்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்பட்டு சிறிய உலோகக் குழாய் பொருத்தப்படுகிறது. பைபாஸ் அறுவை சிகிச்சையில் அடைப்பைத் தவிர்த்து ரத்தம் செல்ல புதிய பாதை உருவாக்கப்படுகிறது.

அனைவருக்கும் ஒரே சிகிச்சை பொருந்தாது. அடைப்பின் அளவு, பாதிக்கப்பட்ட ரத்தக் குழாய்கள், சர்க்கரை நோய் மற்றும் இதயத்தின் செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சையைத் தீர்மானிக்கின்றனர்.

மேலும், ஸ்டென்ட் அல்லது பைபாஸ் செய்த பின்னரும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *