மாவீரர் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம், கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் துப்புரவுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் ஏற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, ஏற்பாட்டுக் குழுவினருடன் கலந்துரையாடிய அவர், நினைவேந்தல் நிகழ்வுகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியதுடன், தனது முழுமையான ஒத்துழைப்பையும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று, வாகரை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவை செயற்பாட்டாளர் குகதாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

