பண்டிகைக் கால போக்குவரத்துச் சோதனைகள் தீவிரம்!

நெருங்குவதையடுத்து, நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் வாகன நெரிசல் மற்றும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் மற்றும் சாரதிகளின் ஆவணங்கள் தீவிரமாகப் பரிசோதிக்கப்படும்.

“பாதுகாப்பான பயணம் – நம் அனைவரின் பொறுப்பு!” என வலியுறுத்தியுள்ள அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *