திருக்கார்த்திகையை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் விசேட வழிபாடுகள்

இந்துக்களின் மிக முக்கியத்துவம்வாய்ந்த விரதங்களுள் திருக்கார்த்திகை விரதம் முக்கியத்துவம்வாய்ந்ததாகும்.

திருக்கார்த்திகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வீடுகளிலும் திருவிளக்குகள் ஒளியேற்றி இறைவனை வழிபடும் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகையை முன்னிட்டு விசேடபூஜைகள் மற்றும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலதாக வந்து ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை அருகில் விசேட பூஜைகள் நடைபெற்று அவை எரிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *