மட்டக்களப்பு மாவட்ட செயலக வருடாந்த ஒன்றுகூடல், பிரியாவிடை நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் நேற்று (22) மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும் தங்களது சேவைகளை சிறப்பாக வழங்கி ஓய்வுபெற்ற, பதவியுயர்வு மற்றும் வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று கடமைகளை ஆற்றிவருகின்ற உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிச்சங்க போசகரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

மெளன இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது நலன்புரிச்சங்க தலைவரும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வரவேற்புரையினை தொடர்ந்து உடலுக்கும் மனதிற்கும் வலிமை சேர்க்கும் வண்ணமாக உத்தியோகத்தர்களிடையே பல கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரின் உரை, நினைவு உரைகள் மற்றும் பாராட்டு உரைகள் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்விற்கு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த பதவியுயர்வு பெற்ற, ஓய்வு பெற்ற மற்றும் வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிரேஸ்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கௌரவிக்கப்பட்டவர்களின் ஏற்புரையும் இடம் பெற்றிருந்தன.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தவர்களை கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *