தெஹ்ரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அந்தப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது குறித்துத் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அரசுச் செய்திகள்
ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களைக் கடுமையாக விமர்சித்த அவர், அவர்கள் வெறுமனே காலத்தைக் கடத்தும் விதத்தில் பேசிக்கொண்டே இருப்பதாகவும், அதில் எவ்வித அர்த்தமும் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கக் கடற்படை விதித்துள்ள முற்றுகையை மீறி ஈரானியக் கப்பல்கள் கடக்க முயற்சித்தால், அமெரிக்கப் படைகள் அவற்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூழ்கடிக்கும் என ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் மீண்டும் வெடித்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் காணொளிகளைத் தாம் பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானியப் போராட்டக்காரர்கள் தமது போராட்டங்களைத் தொடருமாறு ஊக்குவித்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அரசுச் செய்திகள்
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் போர் மூண்டது. இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.

