கலை மரபுகள் குறித்த ஆழமான அறிவுடையதும் அவற்றின் பெறுமதியை உணர்ந்ததுமான ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், மக்களிடையே பரிவு, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை வளர்க்கும், பிறரின் துன்பத்தை உணரச் செய்யும், வேறுபாடுகளை மதிப்பதற்கு வழிகாட்டும் கலை உருவாக வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) நடைபெற்ற ‘சாம நாட்டிய நாடகத்தின்’ 40 வருடப் பயணத்தைக் கொண்டாடும், அதன் சிரேஷ்ட கலைஞர்களைக் கௌரவிக்கும் “TRIBUTE TO LEGENDS” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

