பெரியகல்லாறில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் இரத்ததான முகாம்!

மட்டக்களப்பு பெரியகல்லாறில் கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் 19ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 17ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

பெரியகல்லாறு இந்து கலாசார மண்டபத்தில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

கழகத் தலைவர் ஆ. அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு லண்டனைச் சேர்ந்த சுதாகர் கலிஸ்கா அனுசரணை வழங்கியிருந்தார்.

“உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” என்ற உயரிய நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில், 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

மேலும், இரத்ததானம் செய்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவுப் பரிசாக ரீசேர்ட்களும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவ்வாறான இரத்ததான முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *