ஹோர்முஸ் நீரிணையில் கடற்கண்ணியில் மோதி இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததாக ஈரான் அறிவிப்பு!

குறித்த கப்பல்கள் தங்களது ரேடார் மற்றும் வழிசெலுத்தல் கருவிகளை அணைத்துவிட்டு, அனுமதிக்கப்படாத தெற்குப் பாதை வழியாகப் பயணிக்க முயன்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றிய இரண்டு கப்பல்களில் ஒன்று மிகப்பெரிய எண்ணெய் தாங்கிக் கப்பலான சூப்பர் டேங்கர் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கப்பல்களின் பெயர்கள், அவை எந்த நாட்டுக் கொடியின் கீழ் பயணித்தன மற்றும் கப்பல் ஊழியர்களின் நிலைமை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்கள் ஈரானின் கடல்சார் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எச்சரிக்கைகளை மீறிச் செயற்படும் கப்பல்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரானிய கடற்படை எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் மோதலில் ஈடுபட்டுள்ள சூழலில், இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் கடல்சார் பாதுகாப்பு குறித்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *