கொரோனாவின் புதிய திரிபு வேகமாகப் பரவுகிறது – சுகாதாரத் துறை தீவிரக் கண்காணிப்பு!

பிஜே.2.1 எனப்படும் புதிய வகை கொவிட்-19 வைரஸ், உலகின் பல நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த மே மாதம் கனடாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் இந்த வைரஸ், வட அமெரிக்கா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஏனைய கொரோனா வைரஸ் வகைகளுடன் ஒப்பிடுகையில், இது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, மூக்கடைப்பு, தலைவலி மற்றும் தசைவலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஏற்கனவே பின்பற்றிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *