கன இறக்குமதிக்கான சலுகைகள் – வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதி தொடர்பில் எவ்வித நிவாரணங்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியாளர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் புதிய வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாகன இறக்குமதிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நேற்று (12) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், வாகன இறக்குமதி வரிகள் அல்லது மேலதிக கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *