நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவையின் நீதிமன்ற எழுத்தர் தரம் IIIக்கான திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் நீதிச்சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.jsc.gov.lk இல் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நடத்தப்பட்ட நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவையின் நீதிமன்ற எழுத்தர் தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாட்ச்சேர்ப்பு தொடர்பான நேர்முகப் பரீட்சைகள் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 12 இல் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் காலை 9.00 மணி முதல் நடைபெறும் எனவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புவியியல் காண்
ஏற்கனவே இந்த நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அது 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

