2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட லஹிரு, 3 நிமிடங்கள் 59.08 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேவேளை, 3 நிமிடங்கள் 58.73 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்த எதியோப்பிய வீாரர் செப்லெகா வாபி (Seblega Wabi) தங்கப் பதக்கத்தை வென்றார்.
மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இளைஞர் ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை பெற்ற இரண்டாவது பதக்கம் இதுவென்பதுடன், இதற்கு முன்னர் பாரமி வசந்தி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இதற்கமைய, லஹிரு வென்ற இந்த வெள்ளிப் பதக்கமானது இளைஞர் ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை பெற்ற மிகச்சிறந்த வெற்றியாகப் பதிவாகியுள்ளதுடன், இந்த பதக்கத்துடன் இலங்கை இம்முறை பதக்கப் பட்டியலில் 60ஆவது இடத்தைப் பிடிக்க முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

