துருக்கியின் இஸ்மிர் மாகாணம் அலியாகா மாவட்டத்தில் இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததோடு 12 பேர் காயமடைந்துள்ளனர்.
தொழிற்சாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு அங்கு பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டுள்ளது.தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் தொடர்பில் நடைபெற்ற விசாரணையில் மாற்று கொதிகலனை ஏற்றிச்சென்ற ஒரு கிரேனின் சரிவு காரணமாக, கீழே இருந்த உலைக்குள் பொருட்கள் விழுந்ததால், இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது என உள்ளூர் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெடிவிபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொழிற்சாலை வெடிவிபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

