அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக, சம்பள வருமானத்தின் மீதான PAYE (Pay-As-You-Earn) வரி திருத்தியமைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது தொடர்பான சட்டமூலங்கள், கருத்துகளை முன்வைக்கும் தரப்பினர் மற்றும் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடி, விரிவான இணக்கப்பாட்டை எட்டாமல் நிறைவேற்றப்படமாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

