கிழக்கு ரயில் பாதையில் யானை மோதலைத் தடுக்க புதிய திட்டம்!

காட்டு யானைகள் ரயில்களில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்கும் நோக்கில், அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட மதிப்பாட்டுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோரின் இணைத் தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி அறை இலக்கம் 3 இல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ரயில்வே திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலான முன்னேற்றங்கள் ஆராயப்பட்டதுடன், கிழக்கு இரயில் பாதையில் யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பின்வரும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:

சூழலைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், வேகத்தைக் கட்டுப்படுத்தவும் கூடிய அதிநவீன இரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்தல். ரயில் சாரதிகள் பாதையைத் தெளிவாக அவதானிக்க ஏதுவாக சக்திவாய்ந்த இயந்திரங்களை இணைத்தல்.

யானைகள் கடக்கும் பகுதிகளில் அறிவிப்புப் பலகைகளை மேம்படுத்துதல். ஹபரணை – கந்தளாய் மார்க்கத்தில் 133 1/2 மைல்கல் பகுதிக்கு நீர் அருந்த வரும் யானைகள் இரயில் பாதைக்கு வருவதைத் தடுக்க, அருகில் இரண்டு இடங்களில் மாற்று நீர்த் தடாகங்களை அமைத்தல்.

இதற்கமைய, பொருத்தமான இரண்டு இடங்களில் நீர் தடாகங்களைக் கட்டி அவற்றுக்கு நீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *