சீரற்ற காலநிலை: 21,452 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 5,829 குடும்பங்களைச் சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இன்று (03) வரையிலான காலப்பகுதியில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை,

இதற்கமையஇ நாட்டின் 19 மாவட்டங்களில் உள்ள 147 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இரண்டு உயிரிழப்புகளும் ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன் 8 வீடுகள் முழுமையாகவும் 767 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

அதிகளவான பாதிப்பு இரத்தினபுரி மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதுடன் அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக அதிகளவான பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இதற்கமைய அவ்மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6இ900 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *