ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீன் எழுதிய “சங்கையின் ஒலி” (கவிதைத் தொகுப்பு) நூல் வெளியீட்டு விழா இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணிக்கு சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் அதிபரும் முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான கலாபூஷணம்
ஏ.பீர்முகம்மது (இரண்டாம் விசுவாமித்திரன்) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன்
பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்
ஏ.எல். தௌபீக், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.றஷ்மி மூஸா ஆகியோர் கலந்து கொள்வதோடு, விசேட அதிதிகளாக சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரியும்
கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தருமான ஏ.பி.நௌஷாத், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.தௌபீக் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நூலாசிரியர் குறித்த கவிதைத் தொகுப்பு நூலினை ஹாஜியானி ஜெமீலா கரீம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யவுள்ளார்.
நிகழ்வில் முதன்மைப் பிரதிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும் இளைஞர் அமைப்பாளருமான எம்.எம்.எம்.பாமி, ஓய்வுபெற்ற பொறியியலாளர் அல்ஹாஜ்.எம்.ஐ.எம். அப்துல் ஸலாம், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் அல்ஹாஜ் சி.பி.எம்.ஹனீபா ஆகியோர் பெற்றுக் கொள்வதோடு, நிகழ்வில் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் எம்.அப்துல் றஸாக் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பென் கிளப்பின் தலைவி கலாபூஷணம் சித்தி மஷுறா சுஹுர்தீன் இரசனைக் குறிப்பை தருவதோடு, அம்பாறை மாவட்ட கலாசார அதிகாரசபையின் பிரதித் தலைவரும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவருமான அஸ்வான் சக்காப் மௌலானா நிகழ்வில் வாழ்த்துரை வழங்குகிறார்.

