ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி தேரர்கள் 10ஆவது நாளாகப் போராட்டம்!

சிறையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தேரர்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை 10ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 16 ஆம் திகதி விகாரமகாதேவி பூங்காவிற்கு பிரவேசித்த பிக்குமார்கள் இந்த சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அன்றைய தினம் முதல் அப்பகுதியில் தங்கியுள்ள நிலையில், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவில் தங்கியிருக்கப்போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *