அரசுக்கு எதிராக மருத்துவர்கள் அதிரடி நடவடிக்கை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத்துக்கான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளைப் புறக்கணித்து, சுகாதாரத் துறையில் நிலவும் சமகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை அரசாங்கம் தொடர்ந்து கைவிட்டு வருவதற்கு எதிராக, எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் நாடு தழுவிய ரீதியில் தீவிர தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பண்டார வரக்காகொட தெரிவித்துள்ளார்.அங்கு மேலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்

இதற்கமைய, மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும், சுகாதாரக் கட்டமைப்பு வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்தத் தொடர் போராட்டங்கள் தீவிர தொழிற்சங்கப் போராட்டமாக உருவெடுக்கும் என அச்சங்கம் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *