திருக்கோவிலில் மோட்டார் குண்டு, டி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா பகுதியில் மோட்டார் குண்டொன்றும் ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று ( 23) வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 1.45 மணியளவில், கஞ்சிகுடிச்சாறு பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்து போது மோட்டார் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில், அரசாங்க நெல் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பிலும் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *