ஹட்டன் குளத்தில் ஆணின் சடலம் மீட்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் குளத்திலிருந்து இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன், வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள், இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், குளக்கரையிலிருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்படும் பாதணிகள், குடை மற்றும் பேஸ் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *