இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஒப்பந்தம் மிக நெருங்கிவிட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது வழக்கமான ஒப்பந்தங்களை விட “மிகவும் வித்தியாசமானதொரு ஒப்பந்தமாக” இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்க்கோ ரூபியோ இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் இறுதி செய்யப்படும் என அவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க தூதுவர் செர்ஜியோ கோர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இறுதிப் புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருவதாகத் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *