கண்டி – மாத்தளை பிரதான வீதியின் அகுரணை, குருகொட 7ஆம் மைல்கல் பகுதியில் சிமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த லாரி வீதியில் பயணித்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் காரணமாக கண்டி – மாத்தளை பிரதான வீதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

