மேஷம்: தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடனான மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிறருக்காகப் பரிந்து பேசுவதையும், அறிமுகமில்லாதவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்கவும். குடும்ப உறவுகளில் அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு | அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வீண் செலவுகளையும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்கவும். பொது இடங்களில் பேசும்போது கவனம் தேவை. வாகனப் பயணங்களிலும் நீர்நிலைகளுக்குச் செல்லும்போதும் எச்சரிக்கையாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை | அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மிதுனம்: நல்ல செயல்களுக்குக்கூட விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம். பிறருடன் அளவாகப் பழகுவது நல்லது. ஆடை, அணிகலன்கள் சேரும் வாய்ப்புள்ளது. முக்கியப் பிரமுகர்களின் நட்பும் அரசாங்கத்தின் ஆதரவும் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் | அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கடகம்: பணம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம் என்பதால் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும். வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிப்பதுடன், வெளியூர் பயணங்களும் ஏற்படலாம். குடும்ப ரகசியங்களைப் பிறரிடம் பகிர்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை | அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
சிம்மம்: வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறப் பலரின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுக்கவும். பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். நண்பர்களை அடையாளம் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கன்னி: உடல்நலத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. போதிய ஓய்வு எடுப்பதுடன், உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். குடும்ப வாழ்க்கையில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை | அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
துலாம்: எடுத்த காரியங்களில் உறுதியுடன் செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகளும் உத்தியோகத்தில் வேலைப்பளுவும் அதிகரிக்கலாம். வீண் பேச்சுகளையும் வாக்குவாதங்களையும் தவிர்த்து நிதானமாகச் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை | அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
விருச்சிகம்: பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைப்பதுடன், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிறரை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். அரசு சார்ந்த விடயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் | அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தனுசு: சொத்து தொடர்பான பிரச்சினைகளில் பெரியோரின் ஆலோசனைகளைப் பெறவும். குடும்ப உறவுகளில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் அதிகரிக்கலாம். பணத்தட்டுப்பாடு குறையும் வாய்ப்புள்ளது. இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பதுடன், தடைப்பட்ட கட்டிடப் பணிகள் நிறைவடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை | அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
மகரம்: சுபகாரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப செயல்படவும். பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் | அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கும்பம்: சுபகாரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிதானமாகச் செயல்படவும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளுடன் இணக்கமாகச் செயல்படவும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் | அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
மீனம்: மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வோர் கவனமாகச் செயல்பட வேண்டும். வெளியில் உண்பதை முடிந்தவரை தவிர்க்கவும். மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். சிறிது முயற்சி செய்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம். கலைஞர்களுக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு | அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

