களு கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கலவெல்லாவ பகுதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (12) காலை நிலவரப்படி, மில்லகந்த நீர்மட்ட அளவீட்டு நிலையத்தில் நீர்மட்டம் ஐந்து மீட்டரைக் கடந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, களு கங்கையை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், நிலைமைகளைக் கவனித்து அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

