யாழ். பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டம் பெற்ற திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த மூவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுமாணிப் பட்டமான Master of Education (M.Ed.) பட்டத்தை திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த மூவர் பெற்றுள்ளமை பாடசாலை சமூகத்தினரிடையே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் கே. கங்காதரன், அப்பாடசாலையின் ஆசிரியர் கே. தனுஷன் மற்றும் சக்தி வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி சஜிதா தனுஷன் ஆகிய மூவருமே கல்வியியலில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளனர்.

கல்வித்துறையில் தமது அறிவையும் தொழில்சார் திறன்களையும் மேலும் மேம்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட உயர்கல்விப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக இவர்களின் இந்த முதுமாணிப் பட்டப் பெறுகை அமைந்துள்ளது.

குறிப்பாக, திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் பணியாற்றும் பாடசாலை அதிபர் ஒருவர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் கல்வியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளமை. கல்வித்துறையில் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான தொழில்முறை முன்னேற்றத்திற்கான ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவர்களின் இந்த கல்விசார் சாதனை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் சக்தி வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினருக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா – 2026க்கான அதிகாரபூர்வ பட்டதாரிகள் பட்டியலில் Master of Education பட்டத்திற்கான பட்டதாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

கல்வித்துறையில் தமது உயர்கல்விப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ள கே. கங்காதரன், கே. தனுஷன் மற்றும் திருமதி சஜிதா தனுஷன் ஆகியோருக்கு திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், பாடசாலை சமூகத்தினர் மற்றும் பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *