உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு ருமேஷ் தரங்க பரிந்துரை!

இலங்கையின் ஈட்டி எறிதல் சாம்பியனான ருமேஷ் தரங்க பத்திரகே 2026ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் உலக தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உலக தடகள அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ள 10 பரிந்துரைக்கப்பட்டவர்களில் ருமேஷ் தரங்கவும் இடம்பெற்றுள்ளார். உலக தடகள விருதுகள் விழா எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி மொனாக்கோவில் நடைபெறவுள்ளது.

2026ஆம் ஆண்டில் அல்டிமேட் சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

மேலும், 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ள அவர், இந்தப் பருவத்தில் பங்கேற்ற 14 போட்டிகளில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான சிறந்த உலக தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இலங்கை தடகள வீரர் என்ற பெருமையையும் ரூமேஷ் தரங்கா பெற்றுள்ளார்.

இறுதிப் போட்டியாளர்கள் நவம்பர் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் அறிவிக்கப்படவுள்ளதுடன், விருது வெற்றியாளர்கள் நவம்பர் 29ஆம் திகதி மொனாக்கோவில் அறிவிக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *