அமெரிக்கா–ஈரான் மோதலில் திடீர் போர் நிறுத்தம்!

ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு தான் ஒப்புக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கும் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் முறையாக ஒப்புக்கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.

இரண்டு வார காலத்திற்கு, ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும், என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஈரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து மற்றும் தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு,” இது நடைபெறும் என்று அவர் கூறுகிறார்.

ஈரான் ஓர் உடன்பாட்டிற்கு வர இந்திய நேரப்படி இன்று அதிகாலை வரை அமெரிக்காவால் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இல்லையெனில் “இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்படவிருந்த அழிவுகரமான படைகளை நிறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர், என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *