உர விலை குறைப்பு: விவசாயிகளுக்கு புதிய ஒதுக்கீட்டு திட்டம்!

சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை (Quota System) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் நிலவும் உர விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குத் தேவையான உரத்தினை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 25,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் இன்றைய (5) தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

இம்முறை சிறுபோக நெற்செய்கைக்கு மொத்தம் 80,000 தொன் யூரியா உரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மேலதிக யூரியா உர இருப்புகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் விவசாயிகளுக்கான உர மானியத்தை பருவகாலத்தின் ஆரம்பத்திலேயே முழுமையாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *